வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு தேவாலஸ்தான வருடாந்த கொடியேற்ற விழா-

(கனகராசா சரவணன்)  கிழக்கிலங்கையில் திருப்பதியாக விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஸ்ணு தேவாலஸ்தான வருடாந்த உற்சவ திருவிழா நேற்று புதன்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது .

ஆலயத்தின் வருடாந்த உற்சவ கொடியேற்றம் நேற்று புதன்கிழமை 21 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்;ந்து 12 திருவிழக்கள் இடம்பெற்று எதிர்வரும் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்திருவிழாவும் 3 ம் திகதி தீர்த்த  உற்சவத்துடன் முடிவடையும்

இந்த கொடியேற்ற உற்சவ விழா வவுணியா கற்குழி பிரமேற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ குக.அரவிந்த குருக்கள் தலைமையில் ஆலைய பிரதம குருவான  யாழ்ப்பாணம் வழக்கம்பரை சிவஸ்ரீ சாட்சிநாதக் தெய்வேந்திர குருக்கல் மற்றும் உதவி குருக்கள் பிரம்மஸ்ரீ கிருபாசர்மா, பிரம்மஸ்ரீ கோபிசர்மா, பிரம்மஸ்ரீ நவநீபசாமா உட்பட்ட குருமார் கலந்துகொண்டு விநாயர் வழிபாட்டுடன் கிரிகைகள் ஆரம்பித்து கொடியேற்றம் இடம்பெற்றது

இவ்கொடியேற்றத்தில் நூற்றுக்கணக்காக பகத்த அடியார்ர்கள் கலந்து கொண்டுடதுடன் பக்த அடியார்களுக்கு  அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.