வவுணதீவில் யோகாப் பயிற்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் யோகாசன பயிற்சி கண்காட்சி நேற்று(20) செவ்வாய்க்கிழமை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது யோகா பயிற்சியின் பல்வேறு பயிற்சிகள் மாணவர்களினால் செய்து காண்பிக்கப்பட்டன. உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டும் சர்வதேச யோகா தினத்தினை சிறப்பித்தும் மாணவர்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
வித்தியாலய அதிபர் ந.கதிராமதம்பி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந.குகதாசன், வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி டி.சில்வா, ஐஸ்வர்ய கலை மன்றத்தின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களுக்கான பயிற்சியை ஜெயகரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.