மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் இந்நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.
ஏற்கனவே இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இணைத்தலைவர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது