தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 02 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்னர் இருந்த அட்டை தட்டுப்பாடு காரணமாக தற்போது குவிந்து கிடக்கும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களின் கையிருப்புகளை முடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.