கதிர்காம காட்டுப் பாதையில் 25ஆயிரம் அடியார்கள் .

( வி.ரி. சகாதேவராஜா)  வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதையில் கடந்த எட்டு தினங்களில் சுமார் 25ஆயிரம் அடியார்கள் பயணித்து வருகின்றனர்.
இலங்கையின் நாலா பாகங்களிலுமிருந்து இந்து பௌத்த மக்கள் சாரி சாரியாக கூட்டம் கூட்டமாக வந்து கலந்து கொண்டனர். கடந்த( 12) திங்கட்கிழமை காலை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இப்பாதை மீண்டும்  ஜூன் 25 ஆம் திகதி மூடப்படும் . நேற்று (19) திங்கட்கிழமை எட்டாவது நாள் கொடியேற்ற தினமாகும்.
கதிர்காமம்  முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம்  நேற்று  19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை மாதம் 4  திகதிதீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே. கடந்த வருடம் 28820 பேர் காட்டுப் பாதையில் பயணித்திருந்தனர். இம்முறை 45 ஆயிரம் பேர் அளவில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, உகந்தை மலை  முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம்  ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.