மக்களுக்கான துயர் இன்னும் நீடிக்கின்றது. முற்றாகத் துயர் எப்போது நீங்கும் என்றும் சொல்ல முடியாது. இப்பொழுதும் மக்கள் தொடர்ந்து கண்ணீருடனும் துயருடனேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எதிர்பாராத நிலையிலேயே துயர் மக்களை வந்து சேர்கின்றது. ஆகவே மக்கள் மத்தியில் தொடர்ந்து இருக்கும் இந்த துயர் நீங்கும் வரை இந்த மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் இங்கு இருந்தே ஆக வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் 25 வது வருடாந்த பொதுக்கூட்டம் இதன் அலுவலகத்தில் சனிக்கிழமை (17) காலை இதன் தலைவர் அருட்பணி ரி.நவரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இதன் நிகழ்வுக்கு விஷேட அத்தியாக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இங்க தொடர்ந்து உரையாற்றுகையில்.
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் நிறுவனத்தை நான் நீண்ட காலமாக எனது பணியோடு இணைத்து வந்துள்ளேன்.
இந்த நிறுவனமானது பலரின் கண்ணீரைத் துடைத்து பலரின் முகங்களில் புண்ணகைக்கு காரணமான ஒரு நிறுவனம் இது.
எல்லா அரசுசார்பற்ற நிறுவனங்களுக்கும் நிதி கையாளலில் ஒரு குறிப்பிட்ட வரையறை உண்டு.
அப்படியிருந்தும் என்னிடம் உதவி கேட்டு வரும் நபர்களுக்கு நான் முதலில் அவர்களுக்கு கைகாட்டுவது மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் பக்கமே.இச்சங்கமானது இவர்களைத் தேடி வருவோருக்கு முழுமையாக உதவி செய்ய முடியாவிட்டாலும் ஏதோ ஒரு வழியில் அவர்களுக்கு உதவி செய்து அனுப்பி விடுவார்கள் என்பது எமக்கு தெரிந்த விடயம்.
நான் அரசாங்க அதிபராக வருவதற்கு முன் ஏழு வருடங்கள் மன்னார் நகர் பிரதேச செயலாளராக கடமையாற்றியபோது இந்த ‘மார்’ அமைப்புடன் எனக்கு நீண்ட தொடர்புகள் இருந்துள்ளன.நான் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஓய்வுபெற இருப்தால் எனது பணிக்காலங்களில் இந்த அமைப்பு என்னுடன் இணைந்து சேவையாற்றியமைக்கு நன்றிகூற இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
அரச சார்பற்ற நிறுவன கூட்டங்களில் உங்கள் நிர்வாகத்தினரின் சிறந்த சேவையினை அதிகமாக பாராட்டியிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.நான் மன்னார் நகர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலம் யுத்தத்தின் உச்சக்கட்டக் காலமாகும்.
அந்தக்காலத்தில் மக்கள் இடப்பெயர்வு , மக்கள் மீள்குடியமர்வு , பல அனர்த்தங்களை சந்தித்தக் காலம். இயற்கை அனர்த்தம் , செயற்கை அனர்த்தம் கொண்ட காலம்.
இந்த காலப்பகுதியில் ஒரு தொலைNசி அழைப்பு கொடுத்தால் போதும் உங்கள் இந்த அமைப்பு என்னுடன் இணைந்து ஏனைய அமைப்புக்களுடன் மக்களுக்கு தொண்டாற்றியதை மறக்க முடியாது.ஆகவே எனது வேண்டுதல்களை சிரமேற்கொண்டு மக்களின் கண்ணீரைத் துடைத்தத்தமைக்கு அன்று தொட்டு இன்றுவரையுள்ள உங்கள் நிருவாகத்தினருக்கு நன்றிகள்.மக்களுக்கான துயர் இன்னும் நீடிக்கின்றது. முற்றாக துயர் எப்போது நீங்கும் என்றும் சொல்ல முடியாது.
இப்பொழும் மக்கள் தொடர்ந்து கண்ணீருடனும் துயருடனேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எதிர்பாராத நிலையிலேயே துயர் மக்களை வந்து சேர்கின்றது.ஆகவே மக்கள் மத்தியில் தொடர்ந்து இருக்கும் இந்த துயர் நீங்கும் வரை இந்த மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கம் இங்கு இருந்தே ஆக வேண்டும்.மன்னார் மாவட்டத்துக்கு பல நிறுவனங்கள் வந்தது. ஆனால் பல இப்பொழுது காணாமல் போய்விட்டது. ஆனால் இன்றும் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக 38 வருடங்களாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
ஆகவே தொடர்ந்து தளர்ச்சி அடையாமல் ஏழைகளுக்காக உங்கள் பணி தொடர வேண்டும். நிதி அனுசரனை மேலும் கிடைக்கப்பெற வேண்டும்.
அர்ப்ணிப்புடன் சேவையாற்ற வந்திருக்கும் நீங்கள் மக்களுக்கு சேவையாற்ற இறைவன் உங்களுக்கு தந்திருக்கும் இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்து ஒற்றுமையுடன் செயலாற்றுவீர்கள் என எதிர்பார்த்து இறைவன் உங்கள் பணியை அசீர்வதிப்பார் என வாழ்த்தி நிற்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.