கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (18) காலை முதல் பிற்பகல் வரை இடம்பெற்றது.

இதன்போது, கட்சிக்கான நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த (புளொட் ) ஆர். ஆர். எனப்படும் ஆர்.ராகவன்,ஊடகப் பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன்,

தேசிய அமைப்பாளராக தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜெனா எனப்படும் கருணாகரமும் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இணைத் தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க. சுரேஸ் பிறேமச்சந்திரன், என். சிறிகாந்தா, வேந்தன் ஆகியோரும் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.