கோழிச் சண்டை சூதாட்டம் 7பேர் கைது

பணத்துக்காக கோழிச் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேரை நேற்று (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை கோழிகள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் இக் குற்றச்செயல் நடைபெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து நாவலடி பிரதேசத்தில் சம்பவ தினமான நேற்று மாலை 6 மணியளவில் கோழி சண்டை நடாத்தி வந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிசார் கோழிச் சண்டையில் ஈடுபட்டிருந்த 6 பேருடன் கோழிச் சண்டையை பார்த்துக் கொண்ட ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்ததுடன் 6 கோழிகளையும் ஒரு தொகை பணத்தையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.