ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நுவரெலியா தபால் நிலையம்

விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நகருக்கு படையெடுத்து வரும் நிலையில், குறித்த சுற்றுலாப் பயணிகளால் அழகிய இயற்கை சுற்றுச்சூழல் நடுவில் அமைந்துள்ள பிரதான தபால் நிலையம் அழிவை எதிர்நோக்கி வருகின்றமை அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.

இலங்கையில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் அதிகமான சுற்றுலா பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களில் நுவரெலியாவை ஒன்றாக அடிக்கடி குறிப்பிடுகின்றனர்.

இதில் ஆங்கிலேயர்கள் நுட்பத்தின்படி சிவப்பு செங்கல் கொண்டு நுவரெலியா பிரதான நகரின் மையத்தில் உள்ளது இது இலங்கையின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும்.

விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான “ஜெட்வின்” நிறுவனத்திடம் ஒப்படைக்க சோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பலரும் எதிர்ப்பு காட்டுவதுடன் பிரதானமாக நுவரெலியா மக்கள் குரல் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பல்வேறு வழிகளில் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

எனினும் சுமார் ஆறு வருடங்களுக்கு முன் இவ்வாறு தெரிவித்து வந்தனர் அத்துடன் தபால் நிலைய ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

மீண்டும் இவ் பழமையான கட்டிடத்தினை தன்வசமாக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.