கல்முனை  பொலிஸ் நிலைய  அணிவகுப்பு மரியாதை.

(பாறுக் ஷிஹான்)  கல்முனை தலைமையக   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அரையாண்டு  அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும்    பொலிஸ் நிலையத்தில்   இடம்பெற்றது.
 
இந்நிகழ்வானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில்   கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க  கலந்து கொண்டு   அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.
 
 
 மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள்  சுற்று சூழல்  பொலிஸ்உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன்  பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.
 
மேலும் இந்நிகழ்வில்   சவளக்கடை, சம்மாந்துறை ,பெரியநீலாவணை, காரைதீவு, சாய்ந்தமருது,   பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்திருந்தமை குறிப்படத்தக்கது.
 
 இதே வேளை  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனை நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க பொலிஸ் ஆலோசனை குழுவினால் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து  ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனை குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இணைந்து மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வானது கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் ஆரம்பமானதுடன் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து  ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க யுத்த காலங்களில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் சேவைகளில் பல்வேறு  பதவிகளில் சேவையாற்றி அப்பகுதி மக்களுடன் நல்லுறவுகளை கட்டியெழுப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.