மருத்துவ முகாமும் நடமாடும் சேவையும்.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின்கீழும் சுகாதார சேவைகள், சமூக சேவைகள், சுதேச மருத்துவ திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன் அவர்களின் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

நடமாடும் சேவையினை வர்த்தக இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்திருந்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், வைத்தியர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெளிநோயாளர் சேவை, கண் பரிசோதனை, BMI பரிசோதனை போன்ற சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகளும் காணி, ஆட்பதிவு , சமுர்த்தி திணைக்களங்களின் சேவைகளும் இடம்பெற்றிருந்தது.