(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு) வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் திருத்தலயத்திற்கான குமண காட்டு வழிப்பாதை ஊடாக செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை இன்று( 12) திங்கட்கிழமை காலை கிழககு மாணான அளுனர் செந்தில் தொண்டமான அவர்களால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு இருந்தன
கதிர்காமம் முருகன் ஆலயத்தி;ன் வருடார்ந்த கொடியேற்றத் திருவிழாவினை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து குமண காட்டு வழிப்பாதை ஊடாக கதிர்காம திருத்தலத்தினை சென்றடையவுள்ளனர்.
அந்தவகையில் குமண காட்டவழிப்பாதையானது இன்று சம்பிரதாய ரீதியாக கிழக்கு மாணான அளுனர் செந்தில் தொண்டமான அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குமண காட்டுவழிப் பாதையினை திறந்து பாத யாத்திரியர்களை வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் இம் முறை காட்டுப்பாதையூடாக சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து காலை 7 மணியளவில் காட்டுப் பாதை திறக்கப்பட்டது..
நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.என்.டக்ளஸ்இ மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்இ லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா இமொனராகலை மாவட்ட அரசாங்கஅதிபர் இஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க உள்ளிட்ட யாத்தியர்கள் பல அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
கதிர்காம கந்தனின் கொடியேற்ற உற்சவமானது இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன்இம்முறை 45 ஆயிரம் பேர் வரையான பக்தர்கள் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்படத்தக்கது.