புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து இம்முறை 3500 பேர் பயணிக்கின்றனர்.

(ஏறாவூர் நிருபர் நாஸர்)

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக                     மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 263 பேர்                பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹஜ் பயணிகளை வழியனுப்பும் விசேட நிகழ்வு             மட்டக்களப்பு – ஏறாவூர்  முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் மௌலவி கேஎல்ஏ. அமீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அன்வர் அலி கலந்துகொண்டார்.
நூறுல் அமானி பயண நிறுவனத்தின் பணிப்பாளர் எம்ஏஎம் . ஹசீர் மற்றும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை போன்ற பகுதிகளைச்சேர்ந்த ஹஜ்ஜாஜிகள் மற்றும் உறவினர்களும்             நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு ஹஜ்ஜாஜிகளுக்கான விமான பயண டிக்கட் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதன்போது மௌலவி எல்எச். அப்துல்லா விசேட பிரார்த்தனை நிகழ்த்தினார். இதையடுத்து பொதுமக்கள் ஹஜ்ஜாஜிகளை  ஆரத்தழுவி வழியனுப்பினர்.