திருகோணமலையில் திருகோணமலைப் பெரியார்கள் நூல் வெளியீட்டு விழா..!

(அ . அச்சுதன்)
மருத்துவர் சம்பூர் அ . சதீஸ்குமார் தொகுத்த திருகோணமலைப் பெரியார்கள் நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (10) மாலை 4.40 மணிக்கு திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் குச்சவெளி பிரதேச செயலாளர் கு .குணநாதன் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையை சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தார் வி. குணபாலா வழங்க ஆசியுரையை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதமகுரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ  சோ.  இரவிச்சந்திரக்குருக்கள் வழங்கினார்.
நூலின் முதல் பிரதியை தொகுப்பாசிரியர் அ . சதீஸ்குமார் வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்களுக்கும் சிறப்பு பிரதியை குச்சவெளி பிரதேச செயலாளர் கு. குணநாதன் அவர்களுக்கும் வழங்கி வெளியீட்டு வைத்தார்.
வெளியீட்டு நிகழ்வில் எமுத்தாளர்கள்,  கவிஞர்கள், ஆசிரியர்கள்,  ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.