சிறுவர்,பால் நிலை சார் வன்முறைக் கெதிரான செயலணிக் குழுக்கூட்டம்

காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு சிறுவர் பாதுகாப்பு குழு மற்றும் பால் நிலை சார் வன்முறைக் கெதிரான செயலணிக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.

இதன் போது சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அபிவிருத்தி வலுவூட்டல் தொடர்பாக காரைதீவு பிரதேச சபை செயலாளர், காரைதீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் போன்ற வன்முறைக்கு போதைவஸ்து பாவனை காரணம் எனவும் அதனை எவ்வாறு முறியடிக்கலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது.