வீட்டு யன்னலை உடைத்து கொள்ளையர் கைவரிசை.

உறவினர் வீட்டுத் திருமண நிகழ்வுக்கு சென்றிருந்த வேளையில் வீட்டு யன்னல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில் தெரியவருவதாவது,

இப்பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தினர் கடந்த திங்கள் கிழமை (05) அன்று தங்கள் உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வியாழக்கிழமை (08) மாலை தங்கள் வீட்டுக்குத் திரும்பி வந்ததும் தங்கள் வீட்டு யன்னல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கவனித்துள்ளனர்.

பின் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சி பெட்டியும் முப்பதாயிரம் ரூபா பணமும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றபோதும் இதுவரைக்கும் எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.