பழமையான யானை சிலை கண்டுபிடிப்பு

2300 ஆண்டுகள் பழமையான யானை சிலை, கிழக்கு இந்தியாவின் தயா நதிக்கரையில் உள்ள ஒரு கிராமத்தை ஆய்வு செய்யும் தொல்பொருள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டதாக லைவ் சயின்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

சிலையைக் கண்டுபிடித்த இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியக் குழு (INTACH) இது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் பல தொன்மைகள் நிறைந்ததாகக் கூறுகிறது. கல்லால் செதுக்கப்பட்ட சிலை தோராயமாக 3 அடி உயரம் கொண்டது. அதே கிராமத்தில், ஒரு பழங்கால கோவிலின் பகுதிகளின் உட்பட பிற கலைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளது.