இரதோற்சவ முத்தேர் பவனியில் எதிர்கட்சி தலைவர்

கொழும்பு 13 கதிரேசன் வீதி ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் இரதோற்சவ முத்தேர் பவனி திருவிழாவில் ஏதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று(08) காலை கலந்து கொண்டார்.

விசேட அபிஷேக அலங்காரப் பூஜைகளைத் தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேர் ஆரம்பமாகியது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனோ கணேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.