கஜேந்திரகுமார் விதிக்கப்பட்ட பயணத்தடை

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (06) பிறப்பித்துள்ளது.

அண்மையில் மருதங்கேணி விளையாட்டு கழக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் பொலிஸார் விடுத்த வேண்டுகோளின் படி, அவர் பொலிஸில் வாக்குமூலம் வழங்கும் வரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அவருக்கு தற்காலிக வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.