தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உலக சுற்றாடல் தின நிகழ்வு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் புவியியற்துறையினால் உலக சுற்றாடல்தினமானது கலைகலாசார கேட்போர் கூடத்தில் புவியியற்துறைத் தலைவர் கே. நிஜாமிர் தலைமையில் (05) இடம்பெற்றது

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலைகலாசார பீடத்தின்பீடாதிபதி எம்.எம்.பாசில் கலந்துகொண்டதோடு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வின் தலைமையுரையினை துறைத்தலைவர் இவ்வருடசுற்றாடல் தின தொணிப்பொருளான Solutions to plastic pollution தொடர்பாக நிகழ்த்தினார்.

நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் சுற்றாடல், சுகாதார, மற்றும் சமூகபிரச்சினைகள் பற்றியும் எடுத்துரைத்தார். நிகழ்வில் பீடாதிபதி சிறப்புரையாற்றியதோடு பேரசிரியர் எம்.ஐ.எம் கலீலினால் விஷேட விளிப்பணர்வுவிரிவுரையும் நாடாத்தப்பட்டதுடன்,இந்நிகழ்வினை முன்னிட்டு பீடத்தின் வளாகத்தில் மரநடுகையும் மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்இடம்பெற்றன.