கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த பெப்ரவரி மாத சமுர்த்தி வீடமைப்பு லொத்தரில் வெற்றி பெற்ற பயனாளியின் வீடு புனரமைக்கப்பட்டு பயனாளியிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி முகாமைத்துப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (04) உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஐயூப்கான், சமுர்த்தி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் ஏ.சி. சாதிக்கீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.