புலமைப்பரிசில் பரீட்சையில் மேலும் பல மாணவர்கள் சித்தி

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சையில் சித்தியடையாத 146 மாணவர்கள் வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை மீள பரிசீலிக்கும் போது 867 மாணவர்களின் மதிப்பெண் மட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கு 20,334 சிங்கள ஊடக மாணவர்களும், 4,823 தமிழ் ஊடக மாணவர்களுமாக மொத்தம் 25,157 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக தெரிவித்த அவர் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை இரண்டு பரீட்சார்த்திகளால் பரிசோதிக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் தெரிவித்தார்.