செயலிழந்த தீயணைப்பு படை தொலைபேசி எண்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமது தலைமையகத்தின் தொலைபேசி சேவைகள் செயலிழந்துள்ளதாக தீயணைப்பு படைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று மதியம் முதல் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்புப் படைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் அவசர தொடர்புகளை மேற்கொள்ள, தற்காலிகமாக புதிய இரண்டு, தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 0112 68 60 87 அல்லது 0112 68 68 63 ஆகிய இலக்கங்களுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ள முடியும் என தீயணைப்பு படை திணைக்களம் தெரிவித்துள்ளது.