எங்களுக்கு கிடைக்கப்பெற்ற சுற்று நிருபத்தின்படி பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் விடயங்கள் ஆராயப்பட்டு அதில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மட்டுமே மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் ஆராயப்பட்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஐந்து பிரதேச செயலகங்களில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் ஆராயப்பட்டு அதிலிருந்து தீர்வுகாண முடியாது இங்கு சமர்பிக்கப்பட்ட விடங்கள் மட்டுமே இவ் மாவட்ட மட்டக் கூட்டத்தில் ஆராயப்படும்.
ஆனால் மாகாணத்திலிருந்து வந்திருப்பவர்கள் பிரதேச மட்டக் கூட்டங்களில் கலந்து கொள்ளாது ஆராயப்படாது இருக்குமாகில் தங்களால் எதாவது விடயங்கள் இக்கூட்த்தில் முன்வைக்க விரும்பினால் இக்கூட்டத்தின் இறுதியில் முன்வைத்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.