உள்ளூர் உற்பத்திகள் பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நேற்று இடம்பெற்றது.

இக்கண்காட்சியில் பிரதேச உற்பத்தியாளர்களின் பாதணிகள், இனிப்புப் பண்டங்கள், குழந்தைகளுக்கான அலங்காரப் பொருட்கள் போன்றன விற்பனை செய்யப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மேலதிக மாவட்ட பதிவாளர் என்.கிருஸ்ணப்பிரியன், மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பி.சிந்துஜா, எஸ்.சனோகாந், எனப் பலர் கலந்து கொண்டனர்.