வடகிழக்கு சமஷ்டி குறித்த தெளிவுபடுதல்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் பொதுமக்களுக்கான தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு, மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான மக்கள் பிரகடனத்தை வலியுறுத்திய பரப்புரையில்; தமிழ் மக்கள் சமஷ்டி கோர உரித்துடையவர்கள் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்வினை சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

மற்றும் மக்கள் பிரகடனம் எனும் கை நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.கலந்துரையாடலில் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான க.லவகுசராசா மற்றும் அ.மதன் ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுபடுத்தல்களை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் பொது அமைப்புக்கள் ,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.