கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது குறித்தும் உலக உணவு திட்ட பிரதிநிதிகளுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார் .
இக் கலந்துரையாடலில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் சித்திக் மற்றும் அவருடைய அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால், அவர்களுக்காக புதிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்துவது குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் உலக உணவுத் திட்ட WFP நிர்வாகிகள் தாங்களால் முடிந்த முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.