(எருவில் துசி) நீண்ட கால கல்வி சேவையாற்றிய எருவில் கிராமத்தை சேர்ந்த த.குணநாயகம் அவர்கள் 26.05.2023ந் திகதி கோயில்போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார். ஆரம்ப கல்வி ஆசிரியராக கல்வி சேவையினை ஆரம்பித்து, ஆலோசனை வழிகட்டல் ஆசிரியராகவும் தொடர்ந்து பிரதி அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
முதல் நியமனத்தினை எருவில் அ.த.கலவன் பாடசாலையில் ஆரம்பித்து கோடைமேடு நவசக்தி வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து ஆசிரியர் கலாசாலை, களுதாவளை மகாவித்தியாலயம், எருவில் கண்ணகி மகா வித்தியலயத்தில் 19 வருடம் கடமையாற்றி மேலும் செங்கலடி மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி பணியை தொடர்ந்து கோயில்போரதீவு விவேகானந்தா மகாவித்தியலயத்தில் ஓய்வு பெற்றார்.
இவருக்கான பிரியாவிடை நிகழ்வு கோயில்போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தின் அதிபர் சா.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரின் கல்வி சேவையினை பாராட்டி நண்பர்களினால் இன்று (26) மாலை எருவில் கண்ணகி மகா வித்தியலயத்தின் முன்பு இருந்து அவரது இல்லம் வரை கௌரவப்படுத்தி மேளதாள வாத்தியங்களுடன் அழைத்து செல்லவுள்ளதாக நண்பர்கள் தெரிவித்தனர்.