இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய இந்திய வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் (25) இடம் பெற்றது.
கிழக்கில் உள்ள இந்திய நிறுவனங்கள், தனது நலன்புரிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை கிழக்கில் உள்ள நலிவடைந்த மக்களுக்கு வழங்க இந்திய தூதரம் உதவி செய்ய வேண்டும் ,(Alliance air) சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு விமான நிலையங்களுக்கு நீடிக்க கோரிக்கை,இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் போன்று கிழக்கிலும் ரயில் பாதையை மேம்படுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான ஆய்வு செய்து, அதனை விரைவில் முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.