மக்களின் நடத்தைகளினாலே டெங்கிணை ஒழிக்க முடியும் .

கிராமசேவகப் பிரிவொன்றினை எடுத்து பார்த்தால் மக்களின் நடத்தை மாற்றமானது சரியாக இல்லாவிட்டால் டெங்கு அதிகரிக்கும் வேகத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. டெங்கு சம்பந்தமாக மக்களின் ஒத்துழைப்பும் மக்களின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களே டெங்கின் அளவை குறைக்க ஏதுவாக அமையும் என திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்(23) நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நடைபெற்ற டெங்கு சம்பந்தமான பாதிப்புக்கள், 01 திகதி தொடக்கம் 23 திகதி வரையான டெங்கு சம்பந்தமான அறிக்கைகள், கிராம சேவகர் பிரிவில் நடைபெற்ற டெங்கு சம்பந்தமான பாதிப்புக்கள், டெங்கின் பாதிப்பு வயது அடிப்படையில் கணக்கிடல் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

இக் கூட்டத்தில் பொது சுகாதார அதிகாரிகள், கிராம சேவகர் உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவில் (240 டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.