எங்களையும், எங்கள் சூழலையும் நஞ்சாக்காத வாழ்தலைப் பண்பாடாக்குவோம். – பிளாஸ்டிக் இல்லாத வாழ்தலை உருவாக்குவோம்.

எங்களையும், எங்கள் சூழலையும் நஞ்சாக்காத வாழ்தலைப் பண்பாடாக்குவோம். – பிளாஸ்டிக் இல்லாத வாழ்தலை உருவாக்குவோம்.
எங்களதும், எங்கள் சந்ததிகளினதும் நலமான – மகிழ்வான வாழ்தலுக்காக நாங்கள் அனைவரும் எங்கள் எங்கள் கடவுளரிடம் பிரார்த்திக்கின்றோம். ஓடி ஓடி உழைக்கினே;றாம். படிக்கின்றோம் – படிப்பிக்கின்றோம். சொத்துக்களை சேர்க்கின்றோம். சடங்குகள் – கொண்டாட்டங்களைச் செய்கின்றோம். உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றோம். இவ்வாறு பலபலவிதமாகப் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் இந்த ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் எங்கள் வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் இயற்கையை நாசமாக்கும் வகையில் பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளிப் போடுவதன் ஊடாக எங்களது வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டும் இருக்கின்றோம்.
நாங்கள் அறிவுடைய, பொறுப்புடைய சமூகமெனில், பொறுப்புடைமையை சந்ததிகளுக்கு கற்றுத் தருபவர்களாக உடனடியாகப் பிளாஸ்டிக் பாவனை குறைந்த பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
எங்கள் அருகிலுள்ள இந்தியா, பங்களாதே~; போன்ற நாடுகளில் இது சாத்தியமெனில் எங்களுக்கும் இது சாத்தியமானதே.
எங்கள் மதவழிபாடுகள், சடங்குகள், அரசியல், பொருளாதார செயற்பாடுகள் அனைத்திலும் பிளாஸ்டிக்கினாலான பொருட்களின் பாவனையை இயன்றளவு குறைத்தலும், நிறுத்தலும் நாங்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய ஒரு கடமையாக உள்ளது.
மத அமைப்புக்கள் – வணக்கத்தலங்களில் நாளாந்த வழிபாடுகளிலும், விசேட தினங்கள் – சடங்குகள், திருவிழாக்கள் போன்றவற்றிலும் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக்கினாலான பொருட்களைப் பாவிக்கமாட்டோம் – அவற்றுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்ற தீர்மானத்தை மதத்தலைவர்களும் பக்தர்களும் எடுக்க வேண்டும்.
இதைப்பற்றி அந்தந்த மதத் தலைவர்கள், மத அமைப்புக்களின் தலைவர்கள், பக்தர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.
உதாரணமாக வழிபாட்டுக்காகப் பூக்கள் கொண்டு வருபவர்கள் கடதாசிப்பைகளில் அல்லது மீண்டும் மீண்டும் பாவிக்க கூடிய ஓலை – புல்லாலான தட்டுக்கள், பைகளைப் பாவித்தல்.
மதத்தலங்களின் உள் – வெளி அலங்காரங்களில் பிளாஸ்டிக் தாள்களையும், பிளாஸ்டிக் பூக்களையும் தவிர்த்தல்.
திருவிழாக்களில் போடப்படும் கடைகளில் அதிதமாக விற்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறிப்பாக சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களைக் கட்டுப்படுத்தல்.
தாகசாந்தி, தானம் வழங்குவோர் பாவித்து விட்டு எறியும் பிளாஸ்டிக் குவளைகளைத் தவிர்த்தல்.

கல்வி, பொருளாதார அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் தமது நாளாந்த நடவடிக்கைகளின்போதும், நிகழ்வுகளிலும் பிளாஸ்ரிக் பொருட்களைத் தவிர்த்தல்.

அரசியல் கட்சிகள் தமது அரசியல் நிகழ்வுகள், கூட்டங்கள், ஊர்வலங்களின் போது பிளாஸ்ரிக் பாவனையை முற்றாகத் தவிர்த்தல். அலங்காரங்கள் தண்ணீர்ப்போத்தல் உணவுப்பொதிகள் போன்ற அனைத்திலும் பிளாஸ்ரிக் பாவனையைக் கைவிடுதல்.
அரசியல் கட்சிகள் இதனைத் தமது அரசியல் கொள்கையாகவே கொள்வது அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டு மக்கள் மீதும் மண்ணின் மீதும் உள்ள உண்மையான அக்கறையை வெளிப்படுத்துவதாக அமையும்.

அறிவு திறன் மிக்க கற்ற சமூகங்களைக் கொண்டதாகக் கருதப்படும் இலங்கையில் இது சாத்தியமற்ற விடயமல்ல.
தனிநபர்கள், குடும்பங்கள் சமூகங்களாக நாம் செய்ய வேண்டியவை,
எங்கள் சூழலுக்கும், எங்களுக்குமாக பிளாஸ்ரிக் பாவனை குறைந்த வாழ்தலை எங்கள் பண்பாடாகக் கொள்வோம்.
ஒருநாள் பாவித்துவிட்டு எறியும் குவளைகள், காகிதங்கள், பைகளை ஒரு சமூகமாக எங்கள் பாவனையிலிருந்து தடை செய்வோம்.

நாங்களே கழுவிப் பாவிக்கும் கோப்பைகள் – தட்டுக்கள், குவளைகளை சுத்தமற்றவை என்று கருதும் மாயையான மனப்பாங்கிலிருந்து வெளிவருவோம். ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் குவளைகளும் கடதாசியும் தூய்மையானவையல்ல. அவற்றில் பரிமாறும் உணவுப் பொருட்;கள் குறிப்பாக சூடான உணவுகள் உடலுக்குத் தீங்கானவை என்று அனைவருக்கும் தெரியும். ஆகவே, தட்டுக்களுக்கு பிளாஸ்ரிக் காகிதம் விரித்து அதில் உணவு பரிமாறும் பழக்கத்தை கைவிடுவோம்.

பிளாஸ்ரிக் தண்ணீர்ப் போத்தல்களைத் தவிர்த்து தண்ணீர்த் தாங்கிகளையும் கழுவிப்பாவிக்கக் கூடிய குவளைகளையும் பாவிப்போம்.

முன்னோர் பாவித்த விடயங்களையும்; மாற்று வழிகளையும் கண்டறிந்து பாவிப்பது சிரமமானதல்ல. அவற்றை மீள் பாவனைக்கு கொண்டுவருவோம்.

மீள் சுழற்சிக்குரிய உள்;ர் இயற்கைப் பொருட்களை அறிமுகப்படுத்துவோம், பாவிப்போம்.

மூன்றாவது கண் உள்;ர் அறிவு திறன் செயற்பாட்டுக்கான நண்பர்கள் வட்டம்
153 யுஇ 9ம் குறுக்கு,
திருப்பெருந்துறை, மட்டக்களப்பு.

வைகாசி 2023