ஜனக ரத்நாயக்கவை நீக்க அதிக ஆதரவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த பிரேரணை பாராளுமன்ற சபாநாயகர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் சமர்பிக்கப்பட்டது.

கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பின்னர் அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இந்நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.