மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்த முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் வெளிநாட்டில் இருந்து பிரவேசித்த நிலையில், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.
டுபாய் விமான சேவைக்கு சொந்தமான எப்.இசட் 547 ரக விமானம் மூலம் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அவர் நாடு திரும்பினார்.இதன்போது கட்டுநாயக்க வானூர்தி தள பிரபுக்கள் முனையத்தில் வைத்து கைதானார்.கைதானவரிடம் இருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான மூன்றரை கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.அவரிடம் சுங்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், 7.5 மில்லியன் ரூபா அபாரதம் விதித்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.