இணைந்த வடக்கு கிழக்கில் மீளப் பெற முடியாத சமஸ்டி தீர்வே தேவை!

காரைதீவு செயலமர்வில் ஏகமனதாக தீர்மானம்.
(வி.ரி.சகாதேவராஜா)
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாததும் சமஷ்டி முறையிலானதுமான தீர்வினை வழங்க வேண்டும் எனும் மக்கள் பிரகடனம் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்று  திங்கட்கிழமை (22) காரைதீவில் இடம்பெற்றது.
இச் செயலமர்வு வடக்குக் கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
 செயலமர்வில் உரையாற்றிய அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா
“கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மக்களுக்கான தீர்வினை நோக்கிய 100 நாள் செயற்பாட்டு திட்டத்தின் இறுதிநாளில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை வடக்குக் கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையம் மேற்கொண்டு வருவதாகவும் இதன்மூலம் தமிழ்பேசும் மக்கள் உட்பட வடக்குக்கிழக்கில் வாழும் மக்கள் கௌரவமாக வாழ வழி சமைக்கும் “எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு இந் நிகழ்வில் அம்பாரைமாவட்ட சிவில் செயற்பாட்டாளர்கள்  சமூக நலன்விரும்பிகள் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் 150 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் முன்வைத்தனர் இதன்போது.அகம் மனிதாபிமான வளநிலயத்தின் பிரதி இணைப்பாளர் அழகுராசா.மதன் அவர்களும் வரைவு தொடர்பான தெளிவூட்டலை வழங்கியதுடன் அம்பாரை மாவட்ட பெண்கள் வலையமைப்பும் சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் நிறுவனமும் நிகழ்வு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.