கிழக்கில் கல்வி துறையில் மாற்றங்களை ஏற்படுத்த முனையும் புதிய ஆளுர்

கிழக்கு மாகாணத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத அனைத்து குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை 30 நாட்களுக்குள் முடித்து அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்து பிரதம செயலாளர், கல்வி செயலாளர், கல்வி மாகாண பணிப்பாளர், கல்வி வலய பணிப்பாளர் மற்றும் பிரதேச கல்வி அதிகாரி ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண கல்வி வலயங்களில் உள்ள நிதிக் குற்றங்கள், பாலியல் வன்கொடுமை மற்ற அங்கீகரிக்கப்படாத நடைமுறைகள் பற்றிய அறிக்கைகளை ஒப்படைத்து வலுவான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கலந்துரையாடலின் போது பின்வருவனவற்றை உடனடியாக செயல்படுத்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

52% முதல் மிகக் குறைந்த பெறுபேறுகளை கொண்ட கல்வி வலயங்கள் தொடர்பான அறிக்கைகளை 7 வேலை நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளதுடன்,

ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பாடசாலைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களை நியமிக்கவும் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்த பாடசாலைகள் பற்றிய அறிக்கைகளை உடனடியாக பெற்றுத்தரும் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை வளாகத்தைச் சுற்றி போதைப்பொருள் பாவனை தொடர்பில் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் இடைநிற்றலை நிறுத்த புதிய திட்டத்தை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளார்.

கல்வித் திட்டங்களுக்கு ஆதரவாக எம்பேஸ்ஸேயின் கூடுதல் நிதி உதவியைப் பெறவும் கர்ப்பிணி ஆசிரியைகள் முன்னுரிமை அடிப்படையில் அருகில் உள்ள பாடசாலைகளில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.