வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவதாண்டவ நிகழ்வு

வவுனியா -நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமய தொண்டர்சபையின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஒழுங்கமைப்பில் சிவதாண்டவம் நடன நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

கடந்த 10ஆம் தேதி ஆதிலிங்கேஸ்வர பெருமான் ஆலயத்தின் 12ஆம் நாள் மண்டலாபிஷேக பெருவிழா இடம்பெற்ற நிலையில் அதனையொட்டி சிவதாண்டவ நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.