பலஸ்தீனின் 75வது நாடு இழப்பு நினைவு நாள் கொழும்பில் அனுஷ்டிப்பு

கொழும்பில் உள்ள பலஸ்தீன் துாதுவர் ஆலயம் மற்றும் இலங்கையில் உள்ள அரபு நாடுகளின் தூதுவர்கள் போரமும் இணைந்து பலஸ்தீன மக்கள் தமது நாட்டினை இழந்து 75 ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் நிகழ்வு பலஸ்தீன் இலங்கைக்கான துாதுவர் கலாநிதி சுகைர் ஹம்துல்லா செய்யத் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதிகளாக இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்கள் கலந்து கொண்டு பலஸ்தீன் விடுதலைக்காக ஆதரவாக உரையாற்றினார்கள்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரவுப் ஹக்கீம், கபீர் ஹாசீம் முன்னால் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பிணர் விமல் ரத்னாயக்க, சவுதி அரேபியா, ஓமான், ஈரான், ரசியா, பங்களதேஸ், எகிப்து. இந்தோனோசியா, துருக்கி பாக்கிஸ்தான் , ஈராக், துபாய் ஆகிய நாடுகளின் துாதுவர்களும் துாதுவராலயத்தின் பிரநிதிகளும் கலந்து கொண்டு பலஸ்தீன் நாட்டுக்காக கையெழுத்து பலகையில் கையெழுத்திட்டனர்.

இந் நிகழ்வின்போது பலஸ்தீனியத் துாதுவர் அதிதிகளுக்கு பலஸ்தீனியர்களின் அடையாலத்தினைக் கொண்ட சால்வை அனிவித்து பலஸ்தீன நாட்டின் தேசிய கொடி பதித்த நினைவுச் சின்னத்தினையும் வழங்கி கௌரவித்தார். பலஸ்தீன் நாட்டில் நடைபெறுகின்ற குடியிருப்பு கட்டிடங்கள் அழிவுகள் அகதிகளின் நிலைமைகள், மக்கள் படும் அவல நிலைகள் கொண்ட விவரனக் காட்சியும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன் புகைப்படக் கண்காட்சியும் இடம் பெற்றது.

இதன்போது உரையாற்றிய பலஸ்தீனத் துாதுவர்,

இலங்கையில் உள்ள சகல இனங்களும சகல அரசாங்கமும் நீண்ட காலமாக பலஸ்தீன் விடுதலைக்காக ஆதரவு வழங்கி வருகின்றாா்கள். அதற்கான நன்றியறிதலைத் பலஸ்தீனத் துாதுவர் தெரிவித்துக் கொண்டார். 957 ஆயிரம் பலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக அவர்களது வாழ் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள், இவர்கள் 1948 காலப்பகுதியில் இருந்து வாழ்ந்த வந்த காணிகளாகும். 531 பலஸ்தீனியக் கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுளளன. 35வீதமான பலஸ்தீனியர்கள் 58 அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.150,000 பலஸ்தீனியர்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர்.எனத் துாதுவர் அங்கு உரையாற்றினார். இலங்கை நீண்டகாலமாக பலஸ்தீனுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளது. அத்துடன் இந்த நாட்டில் வாழும் சகல இனங்களும் பலஸ்தீன் நாட்டு மக்களது சுதந்திரத்திற்கு ஆதரவினை தெரிவித்து வந்துள்ளதையும் துாதுவர் நினைவூட்டினார்கள். இஸ்ரேலியர்கள் தன்னிச்சையாக எங்களது நாட்டினை பிடித்துள்ளார்கள். ஜ.நா.வின் நாடுகள் இணைந்து பலஸ்தீன் நாட்டின் விடுதலைக்காக ஏற்படுத்திய தீர்மாணங்களையும் இஸ்ரேல் கவணத்த்திற் கொள்ளவில்லை.என தெரிவித்திருந்தார்.