கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் யுன்னான் மாகாண பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்

(ஹஸ்பர்)

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் யுன்னான் மாகாண பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்றது.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் (21) இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில், யுன்னான் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இருதரப்பு வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாண மக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களையும் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள , பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆகியோருடன் யுன்னான் ஆளுநர் வாங் யூபோ, சீனத் தூதுவர் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் தலைமையிலான குழுவினரகள் பங்கேற்றனர்.