சட்டவிரோதமாக மாணிக்ககற்கள் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் மஸ்கெலியா பொலிசாரின் சுற்றி வளைப்பின்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதது.
மஸ்கெலியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மஸ்கெலியா பொலிசார் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் அன்றையத் தினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் 24 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் படி சந்தேக நபர்களுக்கு பணித்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.