ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! ஏற்பாடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 இல் ஆரம்பமாகிறது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 3,568 பரீட்சை நிலையங்களில் இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறுகிறது.

எதிர்வரும் (29) முதல் எதிர்வரும் ஜூன் (08) வரை பரீட்சைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை ரீதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் ஆகியன உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனிப்பட்ட பட்டதாரிகளின் அனுமதியட்டைகள் அவர்களது சொந்த முகவரிக்கும் கடந்த (15) முதல் தபாலில் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.