ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை என்பது திருப்திகரமானதாக அமையவில்லை.தவராசா கலையரசன் பா.உ

பாறுக் ஷிஹான்
 
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை என்பது திருப்திகரமானதாக அமையவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.
 
மட்டக்களப்பு அம்பாறை இலங்கை  தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்வின் 14 ஆவது நிறைவினை அனுஸ்டிக்கும் முகமாக நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
அங்கு கருத்து தெரிவித்த அவர் 
 
அரசாங்கம் கையாள்கின்ற ஒவ்வொரு விடயங்களையும் பொதுமக்களாகிய நீங்கள் அவதானிக்க வேண்டும்.1983 ஆண்டு எமது இனம் நாடு பூராகவும் அழிக்கப்பட்ட பின்னர் 2009 ஆண்டு மீண்டும் மிக மோசமாக அழிக்கப்பட்டது.இவ்வாறான விடயங்களை எமது இளைய சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எதிர்காலத்தில் எமது இனம்  எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துகின்றோம்.இந்த நாட்டின் தலைவர்கள் எந்தவித இதய சுத்தியின்றி எம்மை எவ்வாறு அழிக்க வேண்டும் என்பதை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். என தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
 
குறித்த நிகழ்வின் போது நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கூட்டு வழிபாடு இடம்பெற்றது.பின்னர் பூசையை தொடர்ந்து நினைவுச்சுடர் மாவீரர் குடும்பம் சார்பாக இரு தாய்மார் ஏற்றினர்.அத்துடன் 1 நிமிடம் மௌன அஞ்சலியுடன் ஏனையோர் சுடர் ஏற்றினர்.
 
மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.