சிறுவர்களைக் கடத்தல் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவித்தல்!

அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் சிறுவர்கள் கடத்தல் அல்லது முயற்சிக்கும் குழு குறித்து எவ்வித அறிவித்தல்களும் பொலிஸாரால் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் தாம் அறிவித்தல் விடுத்ததா வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழு தொடர்பில் அக்மீமன பொலிஸாரினால் சமூக ஊடகங்களில் ஊடாக எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.