திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நிதியமைச்சின் நடமாடும் சேவைகள்

(அஷ்ரப் ஏ சமத்)

நீதி அமைச்சின் நடமாடும் சேவையும்  மக்கள் பணி மே 26ஆம் திகதி திருகோணமலையில், மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் மே27ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள  ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. என நிதியமைச்சு நடைபெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சரின் ஊடக ஆலோசகர் கலாநிதி ஹர்ஷ அபேரத்தின் தெரிவித்தார்
 இவ் நடமாடும் சேவையில் நீதி அமைச்சு மற்றும் பதிவாளர் திணைக்களம், அடையாள அட்டை, கடவுச்சீட்டு வழங்கும் திணைக்களம், புனர்வாழ்வு அதிகார சபை, கிழக்கு மாகாண சபைகளின் கீழ் உள்ள  அரச அலுவலகங்கள், சிறைச்சாலைகள் திணைக்களம், நீதி அமைச்சின் கீழ் உள்ள மொழிகள் திணைக்களம், தேசிய இன ஐக்கிய  அலுவலகம் ,, பொலிஸ், சட்டத் திணைக்களம், காணிப் பதிவு,, கிராமங்களில் உள்ள சமாதானப் பேரவை உறுப்பிணர்கள் ,  போன்ற சகல அரச நிறுவனங்களின்  பங்களிப்புடன் இவ் நடமாடும் சேவைகள்  நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலும் பிரதேச அரச பிரநிதிகளின் தலைமையின் கீழ் நடைபெறுகின்றன.
இன்று 18. நீதியமைச்சு அமைச்சரின் ஊடக ஆலோசகர் ஹர்சா அபேரத்ன , உதவிச் செயலாளர் சந்தமாலி பிரதாப் மொழிகள் தேசிய ஒற்றுமைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் சானிக்கா விஜயசூரிய ஆகியோர்கள் கலந்து கொண்டு மேற்படி நடமாடும் சேவைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.
இச் சேவைகளுக்கு பிரதேச சபை காரியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலாளர்கள் ,பிரதேச செயலாளர்கள், கிராம அதிகாரிகள் பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரிகளது  சேவைகளும  பெற்றுக் கொடுக்கப்படும். இந் நடமாடும் சேவையில் தத்தமது பிரச்சினைகள் மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இடம் பெயர்ந்து மீள இலங்கை வந்துள்ளவர்கள் அவர்களது   பிறப்பு பதிவுகள்,  அடையால அட்டைகள்,  பெற்றுக் கொள்ளாதவர்கள் இச் சேவைகள் ஊடாக உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை காணாமல் போனவர்கள் வட கிழக்கில் 2000 பேருக்கும் அதிகமான குடும்பங்கள் அமைச்சருக்கு முறையிட்டுள்ளனர் அவர்கள்  இறப்பு சான்றிதழ்களுக்கான முறையிட்டுள்ளனர். என்றும் ஊடக ஆலோசகர் கருத்து தெரிவித்தார் இந்த அமைச்சின் கீழ் சகல பிரதேச செயலளார் பிரிவிலும் 2444 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்றனா். அவர்கள் ஊடாகவும் பிரதேச மக்கள் தமது பிரச்சினைகளை முன் வைக்க முடியும். எனவும் தெரிவிக்கப்பட்டது.