கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் மற்றுமொரு கட்டம் ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் மற்றுமொரு கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்,

அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு 32 மத்திய நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுவரை 2 பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 6 பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை விஞ்ஞானப் பிரிவிலுள்ள பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த இரண்டரை மாதங்களாக தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் மதிப்பீட்டு பணிகளுக்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தாமதமாகியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.