அல்லாவின் குரலுக்கு செவிசாய்த்து நோம்புக் காலத்தில் இஸ்லாமியர் ஆன்மீகப் பயிற்சி பெறுகின்றனர்.

மன்னார் அரச அதிபர்.

அல்லாவின் குரலுக்கு செவிசாய்த்து நோம்புக் காலத்தில் அல்லா எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என கட்டளையிட்டு இருக்கின்றாரோ அவற்றை கடைப்பிடித்து ஆன்மீகப் பயிற்சி பெற்று உள்ளீர்கள் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் புதுக்குடியிருப்பு முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினால் திங்கள் கிழமை (17) மாலை இத்தார் நிகழ்வு நடாத்தப்பட்டபோது இதில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்  மேலும் தெரிவிக்கையில்

நோம்பு காலத்தின் இறுதி பத்து நாட்கள் இஸ்லாமியருக்கு மிகவும் பயன்தரும் நாட்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்களை அனுஷ்டிக்கின்ற புதுக்குடியிருப்பு மக்கள் நிர்வாகம் இன மத வேறுபாடின்றி இங்கு சகல மத இன முக்கியஸ்தர்களை அழைத்து இவ்வாறான ஒரு இத்தார் நிகழ்வை நடாத்துவதன் மூலம் எமது மன்னார் மாவட்டத்தின் இன ஐக்கியத்தை மீண்டும் வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும் நிகழ்வாக நடாத்துகின்றீர்கள்.

அல்லா இக்காலத்தில் எதை செய்யக்கூடாது என கட்டளையிட்டு இருக்கிராரோ அதை நீங்கள் இக்காலத்தில் செய்யாத இருக்கின்றீர்கள்.

அத்துடன் இக்காலத்தில் இதைச் செய்யுங்கள் என அல்லா தெரிவித்திருப்தற்கு நீங்கள் அதற்கு செவிசாய்த்து அதை செய்து உங்கள் நோம்புக்காலத்தை கடைப்பிடித்து நீங்கள் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.

ஆகவே எதிர்காலத்திலும் அல்லா உங்களுக்கு எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என கட்டளையிட்டு இருக்கின்றாரோ அவற்றை தொடர்ந்து நீங்கள் கடைப்பிடிப்பீர்கள்; என நம்புகின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.