பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக கூட்டணி முன்னியில் பல்வேறு சிவில் அமைப்புக்கள் கைச்சாத்திட்டனர்

(அஷ்ரப் ஏ சமத்)

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசியல் கட்சியுடன் இலங்கையில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புக்கள், ஒன்றினைந்து கூட்டணியாக செயற்படுவதற்காக அக் கட்சிகளின் தலைவர்களுடன் ஓப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு நுாலக கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கனேஸ் தலைமையில் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது அகில இலங்கை தேசிய சமத்துவம், சிற்றுன்டிச்சாலைகள் சங்கம், நுகர்வோ்கள் சங்கம், இலங்கை சமத்துவக் கூட்டணி, கொழும்பு முஸ்லிம் வர்த்தகர் சங்கம், மலையக அடிப்படை உரிமைகள் சங்கம், சிறுகைத்தொழிலாளர்கள் சங்கம்,போன்ற பல்வேறு சிவில் அமைப்புக்கள் சிறிய கட்சிகள் ஒன்றினைந்து ஜனநாயக கூட்டணி முன்னி ஒன்றை அமைத்துள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த நுகர்வோர்கள் உரிமை ற்றும் சிற்றுன்டிச் சாலைகள் சங்த்தின் தலைவர் அசேல சம்பத் ,

எமது அமைப்பு தினந்தோறும் மக்கள் நலனில் மக்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பாவனைப் பொருட்களை விலையேற்றம் மக்களது தலைகளில் விதிக்கும் வரிச்சுமைகளுக்கும் எதிராக நாங்கள் குரல் கொடுத்து வந்துள்ளோம். அத்துடன் பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யும்போது கொள்ளை இலாபம், அரச வற் வரி மற்றும் பல செயற்பாடுகளில் நாளுக்கு நாள் நடைபெறும் முறைகேடுகள், லஞ்சம் போன்ற பலவற்றை அவ்வப்போது வீதிக்கிறங்கி அதனை வெளியில் வெளிக்கெணர்ந்துள்ளோம். தற்பொழுது மூவினங்களையும பிரதிபலிக்கும் பல சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் பிரபா கனேசனின் அரசியல் கட்சியுடன் ஒன்றினைந்துள்ளோம். இக் கட்சி பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியுடன் இணைந்து எமது மக்களின் பிரச்சினைகள் உரிமைகள் விடயத்தில் எதிா்காலத்தில் ஓர் கூட்டணியாகச் செயற்பட உள்ளதாகவும் அசேல சம்பந் அங்கு தெரிவித்தார்.

a