பாடசாலை என்பது வெறுமனே புத்தகப்படிப்புக்கள் மாத்திரமல்லாமல் வாழ்வதற்கான பயிற்சிக்களமாகும்-வலயக்கல்விப்பணிப்பாளர் – எஸ்.சிறிதரன்

எஸ்.சபேசன்.

பாடசாலை என்பது வெறுமனே புத்தகப்படிப்புக்கள் மாத்திரமல்லாமல் வாழ்வதற்கான பயிற்சிக்களமாகும் என்பதோடு கல்வியின் மூலமே எதனையும் சாதிக்கமுடியும் என்பதனை உணர்ந்தே மாணவர்கள் செயற்படவேண்டும் கல்வியினை சரியானமுறையில் கற்காவிட்டால் நாம் எதிர்பார்த்த இலக்கினை எவ்விதத்திலும் அடைந்துகொள்ளமுடியாது என்பதனைக் கருத்தில் கொண்டுதான் எமது கல்விச் சமூகம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்

பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை நிலக்கடலை அறுபடை விழா மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் த.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றபோது பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்மேலும் உரையாற்றுகையில் இன்றைய சிறுவர்கள்தான் எதிர்காலத்தில் நாட்ன் தலைவர்கள் அந்த அடிப்படையில் மாணவர்களாகிய உங்களை சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவதற்காக ஆசிரியர்களோடு இணைந்து நானும் இந்தப்பணியினை முன்னெடுத்துவருகின்றேன்
இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் எமது சமூகம் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிலக்கடலை அறுவடை விழாவும் இடம்பெற்றன.

பட்டிருப்பு கல்வி வலயத்தின் 70பாடசாலைகளில் அம்பாரை மாவட்டத்தின் எல்லைப்புறமான சின்னவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் கஸ்ர நஸ்ரங்களை ஒரே நாளில் என்னால் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது.இப்படியான பாடசாலைகளில் கற்பிப்பதுதான் தர்மமும் தார்மீக பொறுப்புமாகும்.சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார் ‘மக்கட் தொண்டே மகேசன் சேவை’என்று இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் பல தேவைப்பாடுகள் பல பிரச்சனைகள் உள்ளன.அடுத்ததாக எமது சமூகம் எமது தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.எமது சமூகத்திற்கு எமது கோடான கோடி நன்றிகள்..

இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி தனுஷியா ராஜசேகர் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.அருள்ராஜா மற்றும் எமது சமூகம் அமைப்பினர் ஆசிரியர்கள்இமாணவர்கள் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.