ஹட்டன் பிரதான வீதியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.

(வாஸ் கூஞ்ஞ)

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பேருந்தும் ஹட்டன் நகரில் இருந்து கன்டி நோக்கி சென்ற அரச பேருந்தும் தி யகல கினிகத்தேன பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதியதில் பயனிகள் படுகாயம்.

வியாழக்கிழமை (16) அன்று நடந்த சம்பவத்தில் நடந்த இடத்திற்கு கினிக்கத்தேன பொலிசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த பயனிகள் கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளையும் விபத்தால் இடம்பெற்ற வீதி தடையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக கினிக்கத்தேன பொலிஸ் வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்படுகின்றது.