சிவராத்திரியன்று 25 இடங்களில் உருத்திராக்கம் அணிவித்து சிவபணிகள்!

(வி.ரி.சகாதேவராஜா)

மகா சிவராத்திரி விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஈழநாட்டில் ஆலயங்கள் அறநெறிப்பாடசாலைகள் என 25 இடங்களில் மட்டக்களப்பு மாவட்ட சிவ தொண்டர் திருக்கூடத்தின் ஏற்பாட்டில் சிவபணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மகா சிவராத்திரியன்று சிவசின்னமான உருத்திராக்கம் அணிவித்து,சமய சொற்பொழிவுகள் நடாத்தப்பட்டு, சிவபுராணம், திருமந்திரம் இசைக்கப்படவிருக்கின்றன.

எதர்வரும் (18)சனிக்கிழமை காலை மயில்தங்கிய மலை நந்தீச்சரர் ஆலயம் நோக்கி நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் பாதயாத்திரை இடம் பெறும்.

இதுதவிர கீழ் வரும் ஆலயங்களில் உருத்திராக்கம் அணிவித்து சிவபுராணம் திருமந்திரம் ஓதப்படவிருக்கின்றன.

நாவற்குடா சிவன் ஆலயம் ,எல்லைவீதி நரசிங்க வைரவர்சுவாமி ஆலயம்,கல்லடி உப்போடை மயானசிவன் ஆலயம், திருப்பழுகாமம் சிவன் ஆலயம்,விளாவெட்டுவான் வாசுகி அம்மன் ஆலயம்,கிண்ணியா சித்திவிநாயகர் ஆலயம்,
நீர்முகப்பிள்ளையார் ஆலயம், வந்தாறுமூலை
மாவடிவேம்பு ஞானலிங்கேச்சரர் ஆலயம், வாழைச்சேனை கிண்ணையடி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்,வாகரை பால்ச்சேனை
பால விநாயகர் ஆலயம்,செல்வசரஸ்வதி அறநெறிப்பாடசாலை பாலமுருகன் ஆலயம்,
அம்மந்தனாவெளி பாதாளவைரவர்ஆலயம்,புச்சாங்கேணி முருகன் ஆலயம்,
சமன்பிட்டி பத்திர காளியம்மன் ஆலயம்,வளத்தாப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,திருகோணமலை மாரியம்மன் ஆலயம்,
அகத்தியர் அறநெறிப்பாடசாலை (HA/07/56/06/77) ,ஓம் சக்தி அறநெறிப்பாடசாலை (HA/07/56/06/33), ருவன்வெல்ல கலைமகள் அறநெறிப்பாடசாலை,ஆறுமுக நாவலர் மன்றம் ஊடாக ருவன்வெல்ல பிரதேசத்தில் பணிகள் நடைபெறும்,பதுளை மாவட்ட இந்து சமய அபிவிருத்தி பேரவை ஊடாக பணிகள் நடைபெறும் .மன்னார் ஆண்டாங்குளம் விநாயகர் ஆலயம்,
யாழ்ப்பாணம் வீரகத்தி விநாயகர் ஆலயம், ஆரையம்பதி சிவன் ஆலயம் ஆகிய இடங்களில் நடைபெறும்.

மகாசிவராத்திரி தினம் அன்று சிவசின்னமான உருத்திராக்கம் அணிய உள்ளவர்கள் பணிகள் நடைபெறும் இடங்களில் வந்து அணிந்து கொள்ள முடியும் .

பணிகள் யாவும் சிவதொண்டர் திருக்கூடத்தின் சிவதொண்டர்கள் பிரதேச இணைப்பாளர்கள் ஊடாக அவர்களுடைய பிரதேசங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.