கஹட்டோவிட்டவில் சிறப்பாக இடம்பெற்ற கல்வி விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மேல் மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் (12) ஞாயிற்றுக்கிழமை  கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிள் ஆகியவற்றின் ஏற்பாட்டில், கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான எம்.இஸட். அஹமட் முனவ்வர் தலைமையில் 11 ஆவது தடவையாக இடம்பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தராக நியமனம் வழங்கப்பட்ட பிரபல்ய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா பிரதம அதிதியாகவும், டாக்டர் ஷாபி சிஹாப்தீன் கௌரவ அதிதியாகவும்,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் அர்கம் நூராமித் சிறப்புப் பேச்சாளராகவும் தொழிலதிபர் எம்.வை.எம்.பிஸ்ருல் முபீல், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம். றிஸ்வி மரிக்கார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் தொழிலதிபர் எம்.வை.எம்.முகர்ரம், பேராசிரியர் எம்.ஜே.எம்.ராசி, அபிவிருத்திக்கும் பயிற்சிக்குமான இலங்கை நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய் எஸ்.எல். நௌபர்,  தொழிலதிபர் ஆர்.பாலசுப்ரமணியம், மூஷான் இன்டர்நேஷனல் தவிசாளர் முஸ்லிம் ஸலாஹுத்தீனின் புதல்வர் மூஷான் ஸலாஹுத்தீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் சமூகத்தின் கொடை வள்ளல்கள், தனவந்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தெரிவு செய்யப்பட்ட 125 பேருக்கும் கடந்த 10 வருடங்களாக வழங்கி வந்த சான்றிதழ், பதக்கம், பொற்கிலி, பாராட்டு என்பன இம்முறையும் வழங்கப்பட்டன.

மௌலவிகளான எம்.என்.எம். இஜ்லான் (காஷிமி),  எஸ்.எல்.நௌபர்,  அப்துஸ்ஸலாம், அஸ்ஹர் பாகவி ஆகியோர் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கினர்.

கல்வி முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் ஹிஷாம் சுஹைல் நன்றியுரை நிகழ்த்தியதோடு, கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிளின் செயலாளர் இர்ஷாத் மற்றும் இதன் பணிப்பாளர்களான முஹம்மட் பாரிஸ், இல்ஹாம், பயாஸ், ரியாஸ், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிளின் பெண்கள் தலைவி பௌசியா ரசீட் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர். 

முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்க்கிளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான  வருடாந்த விசேட கண்காட்சி ஒன்றும் ஹாஜியானி ஆமினா முஸ்தபாவினால் திறந்து வைக்கப்பட்டது.

கஹட்டோவிட்டவின் பெருமக்கள், சமூக சேவகர்கள்,  உலமாக்கள், புத்திஜீவிகள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.